இறுதி யுத்தத்தில் தம்மிடம் சரணடைந்த போராளிகளின் நல்வாழ்விற்கான செயற்திட்டங்கள் என்ற போர்வையில், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடமிருந்து பெரும் தொகையில் நிதியைத் திரட்டுவதற்கான திட்டம் ஒன்று, கே.பி குழுவினர் ஊடாக சிங்கள அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கே.பி அவர்களின் தலைமையில் வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனத்தின் ஊடாகவே இதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
புகலிட தேசங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோர் யார்?
இவர்களின் பின்னணி என்ன?
சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் செயற்படுத்துவதன் சூத்திரம் என்ன?
போன்ற கேள்விகள் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே எழுவது இயல்பானதே. இவற்றுக்குப் பதிலளிப்பதற்கான தெளிவூட்டல் களமாகவே இக்கட்டுரை விரிகின்றது.
கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் கிளிநொச்சியை ஆக்கிரமித்து, யாழ் – கண்டி நெடுஞ்சாலையை தமது முழுமையான ஆதிக்கத்தின் கீழ் சிங்களப் படைகள் கொண்டுவந்ததை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பாடல்களுக்கான வாய்ப்புக்கள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்தன.
போர் ஓய்வுக் காலப்பகுதியில் அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்தரப்பினருடன் பல்வேறு சந்திப்புக்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் நிகழ்த்தி வந்த பொழுதும், 2006ஆம் ஆண்டு யூலை மாத இறுதியில் மாவிலாறு யுத்தம் தொடங்கிய பின்னர், வன்னிக்கு வெளிநாட்டு இராசதந்திரிகள் பயணம் செய்வதற்கான வாய்ப்புக்களை மகிந்தரின் அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.
இவ்வாறான பின்புலத்திலும்கூட, போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் போன்றோர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தமது தரப்புச் செய்திகளை நேரடியாகவே வெளிநாட்டு இராசதந்திரிகள் வழங்கி வந்தார்கள். எனினும் கிளிநொச்சியையும், யாழ் – கண்டி நெடுஞ்சாலையையும் சிங்களப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டதைத் தொடர்ந்து இதற்கான வாய்ப்புக்கள் முற்றாகவே அற்றுப்போயிருந்தன.
1995 முதல் 2002 ஆண்டு வரையான காலப்பகுதியிலும், ஏறத்தாள இதற்கு ஒப்பான சூழலே நிலவியிருந்தது. சூரியக்கதிர் நடவடிக்கையை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு நகர்த்தப்பட்ட பொழுது, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் ஊடாகவும், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களின் அதிகாரிகள் வாயிலாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மறைமுகத் தொடர்பாடல்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் பேணிவந்திருந்தார்கள்.
எனினும் 1998ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ சிகிச்சையின் நிமித்தம் வன்னியை விட்டு வெளியேறி இலண்டனை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வந்தடைந்ததை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்பீடத்துடன் தங்குதடையின்றி நேரடித் தொடர்பாடல்களை வெளிநாட்டு இராசதந்திரிகள் பேணுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட ஆலோசகர் என்ற வகையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்ற காலப்பகுதியில் இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளை தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு அமைய வடிவமைத்த தத்துவாசிரியர் என்ற விதத்திலும், இயக்கத்தின் அரசியல்-இராசரீக மூலோபாய நடவடிக்கைகளில் முதன்மையான பாத்திரத்தை வகித்த இராசதந்திரி என்ற வகையிலும், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளை பேணுவது வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கு இலகுவாகவே அமைந்திருந்தது.
இதன்பின்னர் போர் ஓய்வுக் காலப்பகுதியில் வன்னிக்கு இராசதந்திரிகள் அடிக்கடி சென்று வருவதற்கு கிடைத்த வாய்ப்பு என்பது, இந்தத் தொடர்பாடலை மேலும் மேம்படுத்தியிருந்தது. எனினும், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவைத் தொடர்ந்தும், வன்னிக்கான தரைவழித் தொடர்புகளை மகிந்தரின் அரசாங்கம் முடக்கியிருந்த சூழலிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்பாடல்கள் தடைப்பட்டிருந்தன.
இறுதிப் போர் உச்சகட்டத்தை எய்திய பொழுது, இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் என்பது தமிழீழ அரசியல்துறையினர் – தமிழீழ சமாதான செயலகத்தினர் ஊடான தொலைபேசித் தொடர்பாடல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதேநேரத்தில், யுத்தம் உச்சகட்டத்தை எட்டிய பொழுது, அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரம்பெற்ற போர்நிறுத்தத்தை விரைவாக ஏற்படுத்தி, சிங்கள அரசின் இனவழித்தொழிப்பு நடவடிக்கையில் இருந்து வன்னி மக்களை பாதுகாப்பதற்கான அவசர தேவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்தது.
இதற்கு ஏதுவான பணிகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக மேற்கொள்வதற்கான ஆளுமை மிக்க ஒருவருக்கு புகலிட தேசங்களில் வெற்றிடம் நிலவிய நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாடல்களுக்குப் பொறுப்பாக கே.பி அவர்களை நியமிப்பதற்கான முன்மொழிவு, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ஆகியோரால் தேசியத் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு முதலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தயக்கம்காட்டிய பொழுதும், மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, கே.பி அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிப்பதற்கு பின்னர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இணங்கியிருந்தார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், கே.பியின் நியமனம் என்பது போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதையும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்ததே தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமாக அமையவில்லை.
இதேநேரத்தில், இதனை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட கே.பி, போர் ஓய்வுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளில் இருந்து நீக்கப்பட்ட பலரை, இராசதந்திர தொடர்பாடல் நடவடிக்கைகள் என்ற போர்வையில் தன்னோடு மீண்டும் இணைத்துக் கொண்டிருந்தார்.
இவர்களுடன், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவில் உதவியாளர்களாகப் பணியாற்றிய கலாநிதி ஜோய் மகேஸ்வரன், சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன் ஆகியோரும், இடைக்கால நிர்வாக வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட சிலரும் இணைந்து கொண்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்ட பொழுது, தென்சூடானிற்கு அங்கீகாரம் கிடைத்தது போன்று, தமிழீழ நிழல் அரசுக்கும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை தம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று, வி.உருத்திரகுமாரன், கலாநிதி ஜோய் மகேஸ்வரன் ஆகியோர் தமிழீழ தேசியத் தலைவரிடம் வாக்குறுதியளித்திருந்தனர்.
இதேபோன்று இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது, கே.பியின் வழிகாட்டலில் அமெரிக்காவில் இருந்து செயற்பட்ட வி.உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களுடன் தாம் பேசிக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்க ஈரூடகப் படையினரின் உதவியுடன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் தாம் ஈடுபடுவதாகவும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தனர். (இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வி.உருத்திரகுமாரன் அவர்களுக்கு எழுதப்பட்ட திறந்த மடலில் இக்கட்டுரையாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.)
இது இவ்விதமிருக்க, கடந்த ஆண்டு மே 17ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கிய இறுதி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு சிங்களப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த இறுதிக்கணங்களில், பிரித்தானியாவின் சணல்-4 தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கிய கே.பி, ஆயுதங்களை கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக அன்று ஏறத்தாள நான்கு மணிநேரத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தான் தொலைபேசியில் உரையாடியதாகவும் கூறியிருந்தார்.
வன்னியில் இறுதிக் கணம்வரை நின்று களமாடிப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துள்ள போராளிகளின் தகவல்களின் படி, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோருடன் மட்டுமே கே.பி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
இறுதிப் போரின் உச்சகட்டத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கும், கே.பி அவர்களுக்கும் இடையில் எவ்விதமான தொலைபேசித் தொடர்பாடல்களுக்கு இருக்கவில்லை என்பதை, இப்போராளிகள் அடித்துக் கூறுகின்றனர். இந்த நிலையில் நான்கு மணிநேரம் தலைவருடன் தான் உரையாடியதாக கே.பி கூறியது ஓர் அப்பட்டமான பொய் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது.
தவிர, நான்கு மணிநேரத்திற்கு தொடர்ச்சியாக செய்கோள் தொலைபேசியில் உரையாடுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்பது தொலைபேசித் தொழில்நுட்பம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இதற்கிடையே, மே 18ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாக சிங்களப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டதை தொடர்ந்து, புகலிட தேசங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, முழுவீச்சுடன் கே.பி தொடங்கியிருந்தார்.
இதன் முதற்கட்டமாக, 2003ஆம் ஆண்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளில் இருந்து முற்றாக நீக்கப்பட்ட பிரான்சை சேர்ந்த மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரன், நோர்வேயை சேர்ந்த சர்வே என்றழைக்கப்படும் தர்மலிங்கம் சர்வேஸ்வரன் போன்றோரையும், அதற்கு முன்னரான காலப்பகுதியில் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடாவை சேர்ந்த பேரின்பம் என்றழைக்கப்படும் பே.இன்பநாயகம், முரளி என்றழைக்கப்படும் நடராஜா முரளீதரன் போன்றோரையும், தனது முதன்மைக் கடலோடியாக விளங்கிய பிரான்சை சேர்ந்த கங்கா என்பவரையும் முன்னிலைப்படுத்தி, வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கே.பி இறங்கியிருந்தார்.
இதில் மனோ, சர்வே ஆகியோர், 1992ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கே.பியின் இரண்டு கரங்களாகவே செயற்பட்டிருந்தனர். 1980களின் நடுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளராக கடமையாற்றிய மனோகரன், 1997ஆம் ஆண்டின் முற்பகுதியில் வன்னிக்கு லோறன்ஸ் கிறிஸ்ரி திலகர் அவர்கள் மீள அழைக்கப்பட்டதை தொடர்ந்து, கே.பி அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தின் அங்கீகாரம் இன்றியே, மனோ அவர்களை அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக கே.பி நியமித்ததோடு, இது தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிடமிருந்து விளக்கம் கோரப்பட்ட பொழுது, நீண்டகாலமாக இயக்க செயற்பாடுகளில் பிரான்சில் இருந்து செயற்படுபவர் என்ற வகையிலேயே மனோவை அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக தான் நியமித்ததாகவும், அவர் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் என்றும் கே.பி பதிலளித்திருந்தார்.
உண்மையில் 1997ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு நிர்வாகம் என்பது கே.பியின் முழுமையான ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது. யுத்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி தென்தமிழீழத்தில் கருணா அராஜக ஆட்சிபுரிந்தமை போன்று, இக்காலப் பகுதியில் வெளிநாட்டில் கே.பியின் ஆதிக்கமும் அமைந்திருந்தது.
இதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே கிளையின் பொறுப்பாளராக விளங்கிய சர்வேயை, லெப்.கேணல் நாதன் அவர்களின் படுகொலையை தொடர்ந்து அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக கே.பி நியமித்திருந்தார். எனினும் போர்ஓய்வுக் காலப்பகுதியில் இவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினர் வன்னிக்கு அழைத்த பொழுது, தனது குடும்ப வாழ்க்கையையும், துணைவியாரையும் கைவிட்டு, தன்னால் தாயகத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்க முடியாது என்று கூறி, இயக்க செயற்பாடுகளில் இருந்து விலகி ஒஸ்லோவில் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர்களை விட கனடாவை சேர்ந்த பேரின்பம் என்பரை, 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்துலக நிதிசேகரிப்பு நடவடிக்கைகளின் முதன்மையான ஒருவராகவே கே.பி ஈடுபடுத்தியிருந்தார். அப்பொழுது பிரான்சின் விலையுயர்ந்த பகுதி ஒன்றில் நிலச்சொத்துக்களை கொள்வனவு செய்திருந்த இவர், கனடாவில் நான்கு நகைக்கடைகளின் உரிமையாளராகவும் விளங்கி வந்தார்.
ரஞ்சன், குமார் போன்ற பெயர்களில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியா, யேர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளை வலம்வந்த இவர், தான் தமிழீழத்தில் இருந்து வந்திருப்பது போன்ற பிரம்மையை உருவாக்கி, கே.பியின் நிதிசேகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கனக்கச்சிதமாக நடைமுறைப்படுத்தி வந்தார். இதேபோன்று, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்காக சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முரளி என்பரை தென்னாபிரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த கே.பி, பின்னர் அவர் கனடாவை சென்றடைவதற்கு உதவி புரிந்திருந்தார்.
இவ்வாறாக, மே 18இற்குப் பின்னர் புகலிட தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சி கைகூடாத நிலையில், மனோ, சர்வே, பேரின்பம், முரளி போன்றோரின் உதவியுடனும், தனது வார்த்தைக்கு கட்டுப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை ஒருங்கிணைத்தும், வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் போன்றோரின் ஆலோசனையைப் பெற்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டத்தை கே.பி வெளியிட்டிருந்தார்.
இதன் இணைப்பாளராக வி.உருத்திரகுமாரன் அவர்களை கே.பி நியமித்த பொழுதும், இதனை திரைமறைவில் இருந்து இயக்குவதற்கான பொறுப்பு, மனோ, சர்வே ஆகியோரிடமும், போர்ஓய்வுக் காலப்பகுதியில் சிரான் அமைப்பின் பணிப்பாளராக விளங்கிய செல்வின் அவர்களிடமும் கே.பி அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
இதேபோன்று தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகப் பிரகடனம் செய்து, தனது வார்த்தைகளுக்கு கட்டுப்படும் காகிதப்புலிகளைக் கொண்ட தலைமைச் செயலகமும் கே.பி அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த இரு கட்டமைப்புக்களின் ஊடாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதே கே.பியின் நோக்கமாக அமைந்திருந்தது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசின் கைக்கூலியாக கே.பி செயற்படுவதை மருத்துவர் அருட்குமார் அவர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ள நிலையில், கே.பியின் இந்தத் திட்டத்தை மக்கள் யூகித்துக் கொள்வது கடினமானது அல்ல.
இதில் குறிப்பாக கடந்த ஆண்டு மே 23ஆம் நாளுக்குப் பின்னர் ஜி.ரி.வி, பி.பி.சி தமிழோசை போன்ற ஊடகங்களுக்கும், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயங்கும் தமிழ் வானொலிகளுக்கும் செவ்வியளித்த கே.பி, புதிய பாதையில் இனிமேல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயணிக்கும் என்றும், ஏனைய தமிழ் கட்சிகளுடனும், முன்னாள் போராளி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் தான் ஈடுபடுவதாகவும் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், தனது இரு கட்டமைப்புக்களையும் நிறுவும் பணி பூர்த்தியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாத முதல்வாரத்தில் சிங்கள அரசிடம் கே.பி சரணடைந்திருந்தார். ஆரம்பத்தில் கே.பியின் சரணடைவு, சிங்கள அரசின் எல்லைதாண்டிய கடத்தல் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட பொழுதும், அது கே.பி அவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது தற்பொழுது வெள்ளிடைமலையாகியுள்ளது.
இதேநேரத்தில் கே.பியின் சரணடைவைத் தொடர்ந்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடிப்பதற்கு தன்னால் நிறுவப்பட்ட இரு கட்டமைப்புக்கள் ஊடாக கே.பி எடுத்த முயற்சி நிறைவேறவில்லை. கே.பியின் இந்த முயற்சிக்கு இடையூறாக புகலிட தேசங்களில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அமைந்ததோடு, தமிழீழ தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்புக்களும், நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தமிழ்த் தேசிய உணர்வாளர்களை மக்கள் தெரிவுசெய்தமையும், கே.பியின் சதிநோக்கத்தை தடுத்து நிறுத்துவதில் காத்திரமான பங்கை வகித்திருந்தன.
ஒருபுறம் தமிழீழ தனியரசுக்கான பொதுக்கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையான புகலிட உறவுகள் உற்சாகமாக பங்கேற்றதோடு, தவறான சக்திகளின் கைகளில் நாடுகடந்த அரசாங்கம் என்ற பரப்புரைத் தளம் சென்றடைவதையும் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனால் சீற்றம் கொண்ட கே.பி குழுவினர், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாக்குமோசடிகள் இடம்பெற்றதாகப் பொய்யுரைத்து, தேர்தல் முறைகேடுகள் ஊடாக தமது கையாட்களை நாடுகடந்த அரசாங்கத்திற்குள் புகுத்தியிருந்தனர். இதனைவிட, பிரித்தானியாவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த நாடுகடந்த அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம், கே.பி குழுவினரின் தலையீடு காரணமாக இறுதிநேரத்தில் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் நாடுகடந்த அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெறும் பட்சத்தில், கே.பியால் நாடுகடந்த அரசாங்கத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட வி.உருத்திரகுமாரனை அகற்றி விட்டு, அவரது இடத்திற்கு சே.ஜெயானந்தமூர்த்தி அவர்களை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் நியமித்துவிடுவார்கள் என்ற அச்சமே, இவ்வாறான சடுதியான இடமாற்றத்திற்கு காரணியாக அமைந்திருந்தது.
இதில் திரைமறைவில் இருந்து காய்களை நகர்த்தியதில் முதன்மையாக செயற்பட்டவர் மனோ. இவ்வாறாக நாடுகடந்த அரசாங்கத்தின் ஊடாகவும், தனது காகிதப்புலிகள் ஊடாகவும், புகலிட தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களை சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சி கைகூடாத நிலையில், தற்பொழுது வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளில் கே.பி ஈடுபட்டு வருகின்றார்.
இதன் ஓர் அங்கமாக தனது குழுவினரின் உதவியுடன் புலம்பெயர்தேசங்களில் ‘புத்திஜீவிகள்’ என்று கூறிக்கொள்வோரை கொழும்புக்கு அழைத்து சந்திப்புக்களை நிகழ்த்திய கே.பி, தற்பொழுது சிங்கள அரசின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்குமாறு கோரி, பகிரங்கமாகவே வெளிநாடுகளில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றார்.
இது தொடர்பாக கடந்த மாதம் 31ஆம் நாளன்று கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட் நாளேட்டிற்கு செவ்வி வழங்கிய கே.பி, வெளிநாட்டில் தனது ஒருங்கிணைப்பாளராக பிரான்சில் உள்ள மனோ அவர்களே செயற்படுவதாக தெரிவித்துள்ளார். இதேநேரத்தில் கே.பியின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை கனடாவில் முன்னெடுத்து வரும் பேரின்பம் என்பவர், முன்னாள் போராளிகளை கே.பி சந்தித்துக் கலந்துரையாடும் காட்சிகளை இணையத்தளம் ஊடாக வெளியிட்டுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எனக்கூறிக் கடந்த காலத்தில் மும்முரமாக நிதிசேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர், ‘சிறீலங்கா அரசுக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள்’ என்று கூறி தற்பொழுது நிதிசேகரிப்பது வரலாற்றின் இன்னொரு நகைமுரண்.
இதேநேரத்தில், கே.பி அவர்கள் “சிறீலங்கா அரசின் ஒரு கைதி, சிறீலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதைய நிலையும் அப்படித்தான்” என்றுகூறி கே.பியை வி.உருத்திரகுமாரன் அவர்கள் நியாயப்படுத்துவது, அவர் தொடர்பாக ஏற்கனவே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே நிலவும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றது.
வி.உருத்திரகுமாரன் அவர்கள் கூறுவது போன்று கே.பி ஒரு ‘சூழ்நிலைக் கைதியாக’ இருக்கும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்விடயங்கள் தொடர்பாக அவர் வழங்கும் செவ்விகளை எவ்விதமாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் கற்பிதம் செய்து கொள்வது?
நாடுகடந்த அரசாங்கத்திற்கும் கே.பியிற்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று வி.உருத்திரகுமாரன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், வி.உருத்திரகுமாரனை இயக்கும் மனோவை தனது வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக கே.பி நியமித்திருப்பதன் சூட்சுமம் என்ன?
கே.பி அவர்களின் தலைமையில் இயங்கும் தன்னார்வ நிறுவனத்திற்கான நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுக்கும் பேரின்பம் என்பவருக்கும், நாடு கடந்த அரசாங்கத்தில் வி.உருத்திரகுமாரனுக்கு உறுதுணையாக செயற்படும் எவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையா?
நாடுகடந்த அரசாங்கத்தை அமைப்பதில் வி.உருத்திரகுமாரனுக்கு சர்வே என்பவரால் எவ்வித ஆலோசனையும், ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லையா?
இவை புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளிடையே இயல்பாகவே எழும் கேள்விகள்.
இது இவ்விதமிருக்க, “சிங்கள அரசிடமிருந்து தப்புவதற்காகவே, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது போன்று கே.பி நடிக்கின்றார்” என்று கே.பி குழுவினர் சிலர் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவையாகவே இதனை நாம் கொள்ள முடியும்.
ஏனென்றால் கே.பி எவ்விதமான நடிகர் என்பதை கடந்த ஓராண்டில் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் நன்கு கண்டு களித்துவிட்டார்கள். எது எவ்விதமிருந்தாலும், சிங்கள அரசுக்கு நிதிதிரட்டும் கே.பியின் நிகழ்ச்சித் திட்டம் புகலிட தேசங்களில் விரைவில் மண்கவ்வுவது மட்டும் உறுதி.
- சேரமான்
- நன்றி: ஈழமுரசு
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
நாங்கள் தாய்லாந்தில் படும் கஸ்ட நிலைமைகளை யாருமே அறியவே இல்லையா?
அன்பார்ந்த உலகத் தமிழர்களே,
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தாய்லாந்தில் படும் கஸ்ட
நிலைமைகளை யாருமே அறியவே இல்லையா? நாங்கள் இங்கு வந்து 3, 4, 5, 6 இப்படி பல வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இங்கு வரும்போது 2006ம் ஆண்டு அரிசி, இறைச்சி, வாடகை (அறை) என்பன மிகவும் குறைவாக இருந்தது. தற்போது UN எங்களுக்குத்தரும் பணம் ஒரு தனி நபருக்கு 2500Baht. ஆனால் தாய்லாந்துப் பணம் மூன்று மடங்காய் அதிகரித்துவிட்ட நிலையிலும் கூட, UN தரும் பணம் அதிகரித்தபாடில்லை. அகதிகள் அனைவரும் இந்த நிலை பற்றி UN இடம் கோரிக்கையிட்ட போது, உங்கள் நாட்டில் பிரச்சினை தீர்ந்துவிட்டது, நீங்கள் அங்கு சென்று வாழலாம் என்கிறார்கள். இலன்கையில் UN நிறுவனத்திற்கே பாதுகாப்பு இல்லை, அதைவிட வன்னியில் UN அலுவலகம் திறப்பதற்கே அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், கொழும்பிலுள்ள UN அலுவலகம் மூடப்படவேண்டும் என்று, விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, தங்கள் நாடு ஜனநாயக நாடு அதனால்தான் அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தமிழர்கள் 30 வருடங்கள் மந்தவெளியில் போராடி எந்தவொரு பலனும் கிடைக்கவில்லையே. தியாகி திலீபன், அன்னை பூபதி, தந்தை செல்வா, இவர்க்ளெல்லாம் எந்த பூமியில் போராடினார்கள்?
பாங்கிமூன் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தின் போது போர்குற்ற விசாரணைகளை நடத்தவேண்டாம் என்றபோது என்ன நடந்தேறியது? இறுதிக்கட்டப் போரின்போது உலகத்தமிழர்கள் எத்தனை பேர் தீக்குளித்தார்கள், எத்தனை பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். அதிலும் இலண்டனைச் சேர்ந்த பரமேஸ்வரன் புனிதமாக இருந்த உண்ணாவிரதத்தை இலங்கை அரசுக்குத் துணையோடு இருந்த பத்திரிகைக்காரர்கள் அநியாய வளியில் குற்றம் சுமத்தினார்கள்.
கடைசியில் பரமேஸ்வரனால் மீண்டும் போராடி ஈழத்து தமிழன் என்று நிரூபித்துக்காட்டி, ஈழத்துத் தமிழர்களுக்கே பெருமை சேர்த்தார். பரமேஸ்வரன் வன்னிமக்கள் உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, போரை நிறுத்தும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் பாங்கிமூன் என்ன செய்தார். இறுதியில் 50 000 உயிர்களையும் இலங்கை அரசாங்கப் பயங்கரவாதம் கொன்று குவித்தபின் கெலியில் சென்று சுடுகாடுகளைப் பார்வையிட்டார். இவைமட்டுமல்ல, அகதிகளாக வாழும் எங்களை பிரச்சினை தீர்ந்துவிட்டது இலங்கையில் சென்று வாழுங்கள் என்கிறார்கள். மன்னார் உயிலங்குளம் என்னுமிடத்தில், 74 வயதான மூதாட்டி ஒருவரை 5 இலங்கை இராணுவம் கற்பழித்த சம்பவம் உலகிற்கே தெரியும். அப்படியென்றால் அதைவிட குறைவான வயதில் உள்ள பெண்கள் அங்கு எப்படி வாழமுடியும்.
இவையெல்லாம் தாய்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் எப்படி நாங்கள் மீண்டும் இலங்கையில் சென்று வாழமுடியும்?
தாய்லாந்தில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு UN சட்டப்படி என்ன சுதந்திரம் இருக்கிறது? முழுமையான சாப்பாடு, கல்வி, அறைவாடகை, வெளியில் நடமாடும் சுதந்திரம், உடுப்பதற்கு உடுபுடவை, சிறுபிள்ளைகளுக்கு பால்மா, காயப்பட்டு கைகால் முறிந்த நிலையில் வந்தவர்களுக்கு வைத்தியம், வை எதுவுமே இங்குள்ள அகதிகளுக்குக் கிடைப்பதில்லை. இவர்களுக்காக குரல் கொடுப்பதற்கும் யாரும் இல்லை.
UN இல் அகதி அந்தஸ்து பெற்ற குற்றத்திற்காக 4, 5 வருடங்களாக இலங்கை அகதிகள் பலபேர் சிறையில் வாடுகிறார்கள். இத்தனை வருடங்களாக எந்த முடிவும் தெரியாமல் சாப்பாடு, கல்வி, மருத்துவம் எந்த வசதியுமின்றி மிகவும் கஸ்டப்படுகிறார்கள். சில கணவன்மார்கள் சிறையிலும், மனைவி மற்றும் பிள்ளைகை வெளியிலும் இருக்கும்பொழுது, அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் ஏராளம். எந்தவொரு நிறுவனமோ எங்களைப் பார்த்து இரக்கப்படுவதே இல்லை. மூன்றாவது நாட்டில் வாழ்வதற்கான நேர்காணல் நடைபெற்றால் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் நிராகரித்துவிடுவார்கள்.
இந்த நிலைமையில் இந்த அகதிகள் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கையை நினைத்து, பிள்ளைகளும் பெற்றோரும் உளநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றார்கள்.
எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே, எங்களுக்காக குரல் கொடுங்கள். எல்லைகளற்ற தமிழீழப் பாராளுமன்ற உறுப்பினர்களே எங்களைப் பாருங்கள், எங்கள் நிலைமைகளி வெளிக்கொண்டுவாருங்கள். எங்களை இங்கு வந்து பாருங்கள், நாங்களும் தமிழர்கள்தான். இங்கு கிட்டத்தட்ட 1000 தமிழர்கள் இருக்கின்றார்கள். தாயை, தகப்பனை, பிள்ளையை, கணவனை, சொத்துக்களை, கை கால்களை இழந்த நிலையில் இங்கு வந்தோம். இறுதியில் எங்கள் ஒவ்வொருவரின் நிலைமை குடும்பத்துடன் UN முன்னால் தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.
கல்வியை கேட்டோம், இல்லை, பணத்தைக் கேட்டோம், இல்லை, வேறு நாட்டுக்கு அனுப்புங்கள் என்று கேட்டோம், இல்லை, மருத்துவம் இல்லை. தாய்லாந்து சட்டப்படி நாங்களாகவே இங்கு உழைத்து வாழக்கேட்டோம். எந்த உரிமையும் எங்களுக்குக் கிடையாது. இந்த நிலைமையில் இன்னும் எத்தனை காலம் இங்கு வாழப்போகின்றோம் என்றும் தெரியாது. பிள்ளைகளின் கல்வி மறுக்கப்பட்டு கலாச்சாரம் போய்விட்டது.
தயவுசெய்து உலகத்தமிழினமே எங்களையும் பாருங்கள். இந்த நிலைமையில் இருந்து எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் விடுதலை செய்யுங்கள். தாய்லாந்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களின் பணிவான வேண்டுகோள் இது, தயவு செய்து இந்தப் பிரச்சினையை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிட்டு எங்களுக்காகவும் பாடுபடுங்கள்.
இங்கனம்
தாய்லாந்தில் வாழும் இலங்கை அகதிகள்

மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன்.-இயக்குனர் அமீர்-
இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.
ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.
அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத்துறை தயாராக இல்லை.
இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:
ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?
''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும், முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை.
உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது. புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.
திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது. சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!
''ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?''
ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன்.
போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.
தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!
''சீமானின் போராட்டம் அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?''
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.
ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு உரைக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும்.
அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.
ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா? பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள்.
உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!
''உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?''
இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை.
ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.
அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.
அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார்.
அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!
''சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?''
யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!
''லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?''
பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.
இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள்.
தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''
நன்றி: ஜூனியர் விகடன்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010
தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை
வாஷிங்டன்: இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.
இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .
பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுபோன்று வரும் கருத்துக்களை இலங்கை அரசு காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. ஒரு காதை இந்தியாவை வைத்தும், இன்னொரு காதை சீனாவை வைத்தும் அது மூடிக் கொண்டுள்ளது. எனவே உலகப் பெருந்தலைவர்கள் குழுவின் விமர்சனமும் அதன் காதுகளையும், மனதையும் தொடாது என்பது உறுதி.

சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள்.
இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.
ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.
அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:
ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?
''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.
புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.
திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.
சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''
ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?
''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.
தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''
சீமானின் போராட்டம் அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?
''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.
ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.
ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?
பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''
உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?
''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.
அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!
மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.
அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''
சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?
''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''
லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?
''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.
இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)